தொண்டாமுத்தூர்: மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

72பார்த்தது
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (அக்.,5) தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போகும் சூழலில் இருக்கிறது. அவற்றைக் காப்பாற்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், " என வேலுமணி வலியுறுத்தினார்.

சொத்துவரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

தொடர்புடைய செய்தி