வெண்ணந்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் குட்டலாடம்பட்டி ஊராட்சியில் ரூ. 6.00 இலட்சம் மதிப்பீட்டில் 100 மீட்டர் தூரம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி இன்று(செப்.20) நடைபெற்றது. இதில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, சொக்கலிங்கம், KC. ரவீந்தர், பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.