நாமகிரிப்பேட்டையில் மரவள்ளிக் கிழங்கு குறித்த கருத்தரங்கு

52பார்த்தது
மத்திய அரசின் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சாா்பில், தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், உணவுத் திருவிழா, விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் மத்திய கிழக்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி து. ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். விஞ்ஞானி இரா. முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் வரும் நவ. 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், கண்காட்சி, உணவுத் திருவிழா குறித்து விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில்நுட்ப விளக்கங்கள், கண்காட்சிகள், மரவள்ளி விவசாயிகளை கௌரவித்தல் மற்றும் உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி