நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ வடமாயியம்மன் திருக்கோயிலில் இன்று(செப்.13) கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் மற்றும் பாரம்பரிய அன்டா பொங்கல் வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய திருவிழா என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.