நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் அக்கரைபட்டி ஊராட்சியில் அரசின் ஊரக "தூய்மை பாரத இயக்க" விழிப்புணர்வு பேரணியை இன்று(செப்.20) அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, சத்திய மூர்த்தி, பாலு, சொக்கலிங்கம், மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.