நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சிராப்பள்ளி அம்பேத்கர் காலனியில் கடந்த 40 வருடங்களாக சுமார் 50 குடும்பங்கள் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மத்திய அரசு திட்டம் மாநில துணைத் தலைவர் லோகேந்திரன் ஆகியோர் அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.