நெடுஞ்சாலையோரம் பனை விதை நடும் பணி

50பார்த்தது
நெடுஞ்சாலையோரம் பனை விதை நடும் பணி
ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் பனை விதை விதைப்பு பணிகள் நடைபெற்றது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவிரிக் கரையோரம், நீா்ப்பிடிப்புப் பகுதிகள், சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதை விதைப்பு பணியை நடத்தி வருகிறது.

இதனைத் தொடா்ந்து ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நெடுஞ்சாலையோரங்களில் பனை விதைகள் விதைப்பு பணிகள் நடைபெற்றது. மேலும் சாலையோரம் நடப்பட்ட பனை விதைகளுக்கு வாகனம் முகமாக தண்ணீர் விடப்பட்டு வருகிறது.

பனை விதைகள் நடும் விழாவில் ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்புத் துறை உட்கோட்ட உதவிக் கோட்டப்பொறியாளா் வ. கு. ஜெகதீஷ்குமாா், உதவி பொறியாளா் கோ. மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் சாலைப் பணியாளா்கள் இப்பணியினை மேற்கொண்டனா்.

தொடர்புடைய செய்தி