
நாமக்கல்: விட்டாச்சு லீவு.. பள்ளி திறக்கும் நாளும் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 24) கடைசி தேர்வு முடிந்ததும், நாளை மறுநாள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் கோடை விடுமுறைகள் முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.