இராசிபுரம்: இலவச வீட்டு மனை பட்டா விவகாரம் - ஆட்சியர் ஆய்வு

50பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பட்டா வழங்கிய இடத்தில் பிரச்சனைகள் உள்ளது எனக் கூறி திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் ராஜாவாக இருந்தாலும் சரி கூலியாக இருந்தாலும் சரி மயானத்திற்கு சென்றால் ஒரு பிடி சாம்பல் தான் என சான்று கூறி ஊர் பொதுமக்களிடமும், திருநங்கைகளிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இப் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி