பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் திருத்தத்தை கண்டித்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலாளா் கிருஷ்ணசாமி, திவிக மாவட்டச் செயலா் சரவணன், விசிக தொழிற்சங்க துணைச் செயலா் கபிலன், ஆதித்தமிழா் பேரவை மாநில துணைச் செயலா் கண்ணன், அனைத்திந்திய மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் மீனா, ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் ராவணன், சிபிஎம் நகரச் செயலா் எஸ். மணிமாறன், திவிக நகர அமைப்பாளா் சுமதிமதிவதினி, நகர செயலா் சேகுவேரா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.