வீணாய் போன எடப்பாடி பழனிசாமி பற்றி என்னிடம் கேள்விகளை கேட்க வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "2026 தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம், அது 'With or Without பழனிசாமி' என்ன ஆகும் என்பது கேள்விக்குறி. இன்று இபிஎஸ் ஆணவத்தில் ஆட்டம்போடுகிறார் என்று இந்த உலகிற்கே தெரியும்" என்று கூறியுள்ளார்.