நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இராசிபுரம் ரயில் நிலையம் அருகில், மேம்பாலத்திற்கு கீழ் தண்டவாளத்திற்கு இருபுறமும், செடி கொடிகள் உள்ளது. இந்த காய்ந்த செடி கொடிகளில் நேற்று மதிய வேளையில் அதிகளவில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் இங்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது கோடை காலத்தின் காரணமாக தீப்பற்றியதா? என விசாரணை நடைபெற்றது.