குமாரபாளையம் - Kumarapalayam

அரசு மருத்துவமனையில் ஆட்சியரின் பேரனுக்கு சிகிச்சை

அரசு மருத்துவமனையில் ஆட்சியரின் பேரனுக்கு சிகிச்சை

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட ஆட்சியரின் பேரன்! உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய பேரனை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வருகிறாா் மாவட்ட ஆட்சியா் ச. உமா. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அரசியல் பிரமுகா்களும், அதிகாரிகளும் தயங்கும் சூழலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய பேரனை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வருகிறாா். மாவட்ட ஆட்சியா் ச. உமா. மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலா்கள், அரசியல் பிரமுகா்கள் பலா் தங்களது குழந்தைகளை பெரும்பாலும் தனியாா் பள்ளிகளில் சோ்க்கவே அதிக ஆா்வம் காட்டுகின்றனா். இதற்காக பல லட்சம் ரூபாய் செலவழிக்கின்றனா். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடாமல் தனியாா் மருத்துவமனைகளுக்கே இவா்கள் செல்கின்றனா். இந்த நிலையில் மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையிலும், தன்னுடைய மகள் வழி பேத்தியை அங்கன்வாடியில் சோ்த்து கல்வி பயில வைக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமா, அண்மையில் தன்னுடைய 3 மாத பேரன் சளித்தொல்லையால் உடல் நலம் குன்றியபோது, தனியாா் மருத்துவமனையை நாடாமல், அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்து வருகிறாா். தற்போது குழந்தை உடல் நலம் தேறியுள்ளது.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా
Sep 30, 2024, 17:09 IST/వనపర్తి
వనపర్తి

పీఎం విశ్వకర్మ యోజన వెంటనే అమలుపరచాలి: బిజెపి

Sep 30, 2024, 17:09 IST
ప్రధానమంత్రి విశ్వకర్మ యోజనను గ్రామాలలో వెంటనే అమలుపరచాలని కోరుతూ ప్రజావాణిలో బిజెపి జిల్లా అధికార ప్రతినిధి పెద్దిరాజు ఆధ్వర్యంలో జిల్లా కలెక్టర్ కు సోమవారం వినతిపత్రం అందజేశారు. సందర్భంగా వారు మాట్లాడుతూ. కార్పొరేట్ కంపెనీల రాకతో గ్రామీణ ప్రాంతాల్లో కనుమరుగైపోతున్న చేతివృత్తులు కమ్మరి, కుమ్మరి, ఎరుకలి, చాకలి, మంగలి, వడ్రంగి, దర్జీ, చేపల వేట, చెప్పులు కుట్టడం తదితర 14 రకాల చేతివృత్తుల వారికి చేయూతనందించి ఆర్థిక పరిపుష్టి సాధించడానికి నరేంద్ర మోడీ ప్రతిష్టాత్మకంగా చేపట్టారన్నారు.