வேதாரண்யம் - Vedharanyam

நாகை: தாட்கோ மூலம் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி

நாகை: தாட்கோ மூலம் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி

நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பட்டய கணக்காளா், இடைநிலை நிறுவன செயலாளா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா், ஆகிய போட்டித் தோ்வுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற விரும்பும் மாணவா்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணவா்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மூன்றாவது தளத்திலுள்ள (அறை எண் 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்