நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள கோடியக்காடு, அகத்தியன் பள்ளி, கடினல் வயல், கோவில் தாவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கரில் கெமிக்கல் உப்பும், நான்காயிரம் ஏக்கரில் சாப்பாடு உப்பும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தொடர் மழையின் காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேமித்த உப்புகளை லாரியின் மூலம் ஏற்றுவதற்கு சாலையில் சேரும் சகதியுமாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.