நவ. 15-ல் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீா்த்தவாரியை முன்னிட்டு நவ. 15 (வெள்ளிக்கிழமை) உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுகத் தீா்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வரும் 15 -ஆம் தேதி உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்றைய தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மேலும் இந்த உள்ளுா் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ. 23 (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி