வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா.

68பார்த்தது
எட்டுக்குடியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 2 ஆம் நாளான இன்று வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா கடந்த நவ. 1 ஆம் தேதி லட்சுமி குபேர பூஜையுடன் துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் 2ஆம் நாளான இன்று முருகப்பெருமான் காலை மஞ்சத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி விதீயுலா வந்தார். முன்னதாக மூலவருக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை மகேஸ்வரி அகாடமி குழுவினரின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்வு மற்றும் வீணை வயலினுடன் கூடிய சிறப்பு பாட்டுக் கச்சேரி நிகழ்வு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி