நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர், செல்போன் பார்த்தபடியே கவன குறைவாக சாலையை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.