நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ. அருண் சே. ச அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வருகின்ற 11.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளையும் 11.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.
அவ்வமையம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் சிறுபான்மையினர் நலமேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.