உருவ பொம்மை எரிக்க முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது.

80பார்த்தது
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உருவ பொம்மை எரிக்க முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பாராளுமன்ற தொகுதி வரையறை சம்பந்தமாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் மேகதாது அணைக்கட்டு கட்டுவதற்கான கர்நாடகா அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என கூறி அதற்கு காரணமாக இருந்த கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாரை கண்டித்து வேதாரணியம் காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் துணை முதல்வர் சிவகுமாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார் விவசாயிகள் கொண்டு வந்த சிவகுமார் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உருவ பொம்மையை அபகரித்து சிவகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த சுப்பிரமணியன், சிவகுமார் உள்ளிட்ட காவிரி தமிழ் தேசிய விவசாயிகள் சங்கத்தினரை கைது செய்தனர். வேதாரண்யம் நாகப்பட்டினம் சாலை முகப்பில் சிவகுமார் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி