237 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

73பார்த்தது
கோடிக்கரை ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் இரண்டு ஆமைகளின் முட்டைகளில் இருந்து வெளிவந்த 237 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை இரண்டு பகுதிகளில் ஆமை குஞ்சு பொரிப்பகம் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடலோரத்தில் ஆலிவ் ரிட்லி எனும் கடல் ஆமைகள் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து மணற்பாங்கான பகுதிகளில் குழி தோண்டி முட்டையிட்டுச் செல்வது வழக்கம். நாய், நரிகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கின்றனர். சுமார் 45 முதல் 55 நாட்களுக்குள் வெளிவரும் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவது வழக்கம். கோடிக்கரை பொரிப்பகத்தில் 65 ஆமைகளின் முட்டைகள் 6824 பாதுகாக்கப்பட்டது. இன்று வரை 41 ஆமைகளின் குஞ்சுகள் 3612 விடப்பட்டுள்ளது. இன்று இரண்டு ஆமைகளின் குஞ்சுகள் முறையை 139, 98 என 237 ஆமை குஞ்சுகளை மண்டல தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி வன உயிரின காப்பாளர் பார்கவ் தேஜா உள்ளிட்ட வனத்துறையினர் கோடிக்கரை கடலில் விட்டனர். குஞ்சுகள் கடல் அலையை எதிர்த்து நீந்தி கடலுக்குள் சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி