மின்சார ரயிலுக்கான மின்பாதை சோதனை

81பார்த்தது
அகஸ்தியன்பள்ளி திருவாரூர் இடையே மின்சார ரயிலுக்கான மின்பாதை சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம்
வேதாரண்யத்தில்
13ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெமோ இரயில் இயக்கபட்டது. தற்போது மின்வழி தடம் அமைக்கபட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. டீசல் எஞ்சின் மூலம்
இரயில் சேவை துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் மின்பாதை அமைக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் 110 கிலோமீட்டர் வேகத்தில் திருச்சி நோக்கி
மின்சார ரயில் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக திருச்சி செல்கிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும் விரைவில் மின்பாதை திட்டத்தில் அகஸ்தியன் பள்ளி - திருவாரூர் வரை இரயில் இயக்கப்படும் என இரயில்வே துறை முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமேஷ் குமார் தெரிவித்தார். இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி