பாராளுமன்ற தொகுதிகளை குறைக்க இருப்பதை ஒன்றிய அரசு 50 வருடங்களுக்கு தள்ளிப் போட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேட்டி.
நாகை மாவட்டம் வேதாரணியம் நகராட்சிக்கு உட்பட்ட தோப்புத்துறை படேசாகிப் மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை சர்வாதிகாரப் போக்கோடு ஒன்றிய அரசுஅமல்படுத்த இருப்பது கவலை அளிப்பதாகவும், பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப் பட இருக்கும் ஒன்றிய அரசின் முடிவை 50 ஆண்டுகளுக்கு தள்ளிப் போட வேண்டும் எனவும் தெரிவித்தார்.