மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி.

54பார்த்தது
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நாகப்பட்டினம் கடற்கரையில், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் 4, நாட்கள் நடைபெற்ற வந்த போட்டியில், பொதுப்பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காவல்துறை வீரர்கள் என 75, அணிகள் பங்கேற்று விளையாடி வந்தனர்.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இறுதி பீச் வாலிபால் போட்டியில், தமிழ்நாடு பீச் வாலிபால் கிளப் அணியுடன், நம்பியார் நகர் பீச் வாலிபால் கிளப்பு ஆகிய அணிகள் விறுவிறுப்பாக விளையாடின.

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு செட் வெற்றி பெற்றிருந்த நிலையில், (deciding set) இறுதி தீர்மான செட்டில் நம்பியார்நகர் அணியை வீழ்த்தி, தமிழ்நாடு பீச் வாலிபால் அணி-15/11, புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதைப்போல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில், அக்கரைப்பேட்டை S. N. செந்தில்குமார் பீச் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்து ஏ. ஆர். போலீஸ் அணி 21/15-21/7 புள்ளிகள் பெற்று இரண்டு நேர்செட்டில் வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான போட்டியில், முதலிடத்தை பிடித்து வெற்றி வாகை சூடிய ஏ. ஆர். போலீஸ் அணி வீரர்களுக்கும், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பரிசு, பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி