முட்டைகளில் இருந்து வெளிவந்த 50 ஆமைக்குஞ்சுகள்.

77பார்த்தது
கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆமையின் முட்டைகளில் இருந்து வெளிவந்த 50 ஆமைக்குஞ்சுகள் கடலில் விட்ட M

கடலில் உள்ள மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும் ஜெல்லி மீன்களையும், கடல் பாசிகளையும் ஆலிவ் ரிட்லி எனும் கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கிறது. ஆகவே இந்த கடல் ஆமைகள் மீனவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடல் ஆமைகள் கடலில் இருந்து கரை ஏறி முட்டைகளை இடுகின்றன. நாய் நரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வனத்துறையினர் இந்த ஆமை முட்டைகளை சேகரித்து பிரத்தியேகமான ஆமை முட்டை பொரிப்பகக் கூடத்தில் புதைத்து பாதுகாக்கின்றனர். சுமார் 45 நாட்கள் முதல் 55 நாட்களுக்குள் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். இந்த ஆண்டு 65 ஆமையின் முட்டைகள் 6150 பாதுகாக்கப்படுகின்றன. அதில் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி வைக்கப்பட்ட ஆமையின் 60 முட்டைகளில் இருந்து 50 ஆமை குஞ்சுகள் இன்று காலை வெளிவந்தது. ஆமைக்குஞ்சுகளை வனவர் இளஞ்செழியன், வன காவலர் சதீஷ்குமார், நாகூரான், ஆமை முட்டை சேகரிப்பாளர் நடேசன் உள்ளிட்டோர் கடலில் விட்டனர். கடல் அலை நீரில் கடல் ஆமைக்குஞ்சுகள் அழகாக நீந்தி சென்றது. எந்த இடத்தில் குஞ்சாக வெளிவந்ததோ அந்த ஆமை சுமார் 15 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் முட்டை வைக்க வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி