இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டானுக்கு செல்ல முடியும். இந்த இரு நாடுகளுக்கும் சாலை மார்க்கமாக பயணிக்கும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. இருப்பினும் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற செல்லத்தக்க அடையாள ஆவணத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். நேபாளத்திற்கு விமானத்தில் சென்றால் கூட பாஸ்போர்ட் தேவையில்லை, ஆனால் பூட்டான் செல்ல தேவை.