மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

55பார்த்தது
கோடியக்காடு ஊராட்சியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்து, கிறிஸ்து முகமதியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.


நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டில் ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பாக தொடங்கி சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல், தீய பழக்கங்களில் ஈடுபடாமல் உள்ளத்தையும் உடலையும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருப்பதாகும். ரமலான் மாதத்தில் இன்று 17 வது நாளாக இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, மாலை நோன்பு துறந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்காடு முகைதீன் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைக்குப் பின் நோன்பு துறப்பு நடந்தது. இதில் கோடிக்கரை கோடியக்காடு கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த ஏராளமானோர் இப்தார் விருந்தில் பங்கேற்றனர். தொழிலதிபர் ஏ டி அப்துல் அஜீஸ் இப்தார் விருந்து அளித்து சிறப்பித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி