மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூரில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாவது பட்டம் பெற்று விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சசிகுமார் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் கலந்துகொண்டு 500 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.