தலைஞாயிறு பேரூராட்சி துணைத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ளது தலைஞாயிறு பேரூராட்சி. 15 பேரூராட்சி உறுப்பினர்களை கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியில் துணைத்தலைவராக செயல்பட்டவர் கதிரவன். இவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து இன்று மார்ச் 24ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11: 30 மணிக்கு நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக கைகளை உயர்த்தி தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் அடிப்படையில் துணைத்தலைவர் கதிரவனுக்கு எதிரான வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தெரிவித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதை ஒட்டி 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.