கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் லட்சுமணன் என்பவர் கடலில் மாயமாகியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. பல்வேறு கடலோர மாவட்டம் மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ் , நவலிங்கம் ஆகிய மூவரும் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. கடைக்கு சென்று மற்ற இரண்டு மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான மீனவர் காணப்படாததால் இரவு 10 மணிக்கு படகுடன் மீனவர்கள் கரை திரும்பினர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். கடலில் மாயமான மீனவரை தேடி இரண்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். மீனவர் மாயமான செய்தி கோடியக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.