திருப்பரங்குன்றம் - Thiruparankundram

அவனியாபுரம்: மிலிட்டரி சரக்கு கொடுக்காததால் தகராறு

அவனியாபுரம்: மிலிட்டரி சரக்கு கொடுக்காததால் தகராறு

மதுரை அருகே அவனியாபுரம் விநாய கர் கோவில் தெருவை சேர்ந்த கணேசனின் மகன் தணிகைகுமார் (39) என்பவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். தற் போது காஷ்மீர் வேலை செய்கிறார். ஒரு மாத விடுமுறையில் மதுரை வந்துள்ளார். இவர் அயன் பாப்பாகுடியில் உள்ள மது பாருக்கு சென்றார். அப்போது ஏற்கனவே அங்கு மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் அவரிடம் மிலிட்டரி சரக்கு கேட்டுள்ளனர். அவர் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம டைந்த வாலிபர்கள் அங்கிருந்த பாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்று ஆபாசமாக பேசி அவரை மிரட்டிச் சென்றனர். இது குறித்து தனிகை குமார் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளக்கல் ஜெயகல்யாணி (32), நடுத்தெரு பாண்டி மகன் பால்பாண்டி (37), முனியாண்டி (45) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా