மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாடல் இந்த வடிவில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.78 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருடன் மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் விலை ரூ. 92 லட்சத்து 50 ஆயிரம். இந்த கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.