மதுரை அருகே மன்னர் கல்லூரியில் 31 வது தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மூன்று நாள் மாநாடு நேற்று (செப்.,20) தொடங்கியது.
தமிழ்நாடு வரலாற்று பேரவையின் முதல் மாநாடு 1994 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. இன்று (செப்.,21) 31 வது வரலாற்று பேரவை மாநாடு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி பங்கேற்றனர். தமிழ்நாடு வரலாற்று பேரவை மாநாட்டின் நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுவது இதுவே முதன் முறை. அமைச்சர் முர்த்தி பேசுகையில், இந்தியாவின் பழமையான நகர் மதுரை பல மன்னர்கள் ஆண்டுள்ளனர். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்திகளும் இலக்கியம், வணிகம், கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினர்.
மீனாட்சி அம்மன் கோவில் கட்டிடக்கலை உலக புகழ் பெற்றது. கீழடி அகழாய்வு உலக வரலாற்று ஆய்வுகளை மாற்றியுள்ளது. சங்க காலத்திலேயே நகர்புற அமைப்பு கட்டிடம் நாகரிக வளர்ச்சியை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வரலாற்று பேரவை சார்பாக நடைபெறும் 31வது ஆண்டு விழாவில் சமூகம் பொருளாதாரம் கலாச்சாரம் பண்பாடு ஆகிய தலைப்புகளில் மூன்று நாட்களில் பல்வேறு அமைப்புகள் நடைபெற உள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறினார்.