போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் ஆணையர்.

52பார்த்தது
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் ஆணையர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கல்லூரியில் காவல் ஆணையர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மாணிக்கம் இராமசாமி கலைக் கல்லூரியில் நேற்று (செப்.18) காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக, நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியக் குடியியல் பணிகள் ஆர்வலர்கள் சங்கத்தை (CIVIL SERVICES ASPIRANTS CLUB) துவக்கிவைத்து, இந்திய குடியியல் தேர்வுகளில் மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக்கொள்வது. தேர்வுகளை எளிதில் எதிர்கொண்டு எவ்வாறு வெற்றிபெறுவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கி, மாணவ மாணவியர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையை திறந்துவைத்து, மாணவ மாணவியர்களுக்கு இடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தியும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி