மதுரை திருநகர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வடிவேல் கரையில் உள்ள கண்மாய் மறு சீரமைப்பு துவக்க விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்
மதுரை திருநகர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக வடிவேல்கரை கிராமத்தின் பிரதான கண்மாய் மற்றும் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வரத்து கால்வாய் இரண்டையும் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி இன்று ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மற்றும் ரோட்டரி மாவட்ட செயலாளர் சசி போம்ரா, ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் இன்று துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்துபவர் திட்ட தலைவர் பொறியாளர் பொன். இரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் கீழ மாத்தூரில் உள்ளதால் நாங்கள் சென்று வர முடியவில்லை. நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரத்துக்கு சென்று வருவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை தர மறுக்கிறார்கள் எனக் கூறியும் சம்பளம் தாமதமாக வருவதாகவும் தங்கள் குறைகளை கூறினார்கள்.