ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள சிசிடிவி கேமரா அமைத்த தன்னார்வலர்.

69பார்த்தது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணியில் சமூக ஆர்வலர் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராவை அமைத்துள்ளார்.

மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சமுக சேவகர் ரவிச்சந்திரன் என்ற தன்னார்வலர் சோளங்குருணி கிராமத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பில் அதிநவீன உயரக சிசிடிவி கேமராக்களை வாங்கி சோளங்குருணி பேருந்து நிறுத்தம், வலையங்குளம் சாலை, குதிரை குத்தி சாலை, நல்லூர் சாலை ஆகிய இடங்களில் பொருத்தி வைத்தார்.

சிசிடிவி கேமரா செயல்பாட்டினை திருமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் அருள் நேற்று(செப்.3) திறந்து வைத்து பொது மக்களிடம் பேசுகையில், இந்த கேமராக்கள் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களையோ அவர்கள் செல்லும் வாகனங்களையோ கண்காணிக்க முடியும். நேற்று முன்தினம் கூடக் கோவிலில் நடைபெற்ற கொலை வழக்கில் கூட அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

மேலும் ஆஸ்டின்பட்டி வட இந்திய வாலிபர் கொலை வழக்கிலும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். கண்காணிப்பு கேமரா திறப்பு விழாவில் பெருங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமணி, சோளங்குருணி கிராம பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி