"வருமுன் காப்போம்" மருத்துவ முகாமில் பலன் பெற்ற கிராம மக்கள்

77பார்த்தது
மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபன் ஆணைக்கிணங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை நாகமலை புதுக்கோட்டை உள்ள அன்னபாக்கியம் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி, ஒன்றிய கவுன்சிலர் லக்ஷ்மி மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் ஸ்கேன் மற்றும் இசிஜி போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது, பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும் ஊட்டச்சத்து அதிகரிக்க என்னென்ன காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுகள் உண்ண வேண்டும் என்பது குறித்தும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளுக்கு எடுத்துரைத்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டிகள் பயிர்கள் மற்றும் ஊட்டச்சத்து கொழுக்கட்டையானது அவர்களுக்கு  வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில்  கீழக்குயில்குடி, மேலகுயில்குடி, வடிவேல் கரை நாகமலைபுதுக்கோட்டை சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி