மதுரை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வியாபரிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து நேற்று (ஆக.,28) கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மதுரை அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் 75 வயது முதியவர். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த போது கோவில் அருகே உள்ள கடையை மறைத்தவாறு காரை நிறுத்திவிட்டு செல்லக்கூடாது எனக் கூறியும் கேட்காமல் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இதனால் இரண்டு கடை உரிமையாளர்கள் காரின் மீது குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை காரில் வீசியுள்ளனர். இதில் கடை உரிமையாளர்கள் அந்த முதியவரை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார்.
இதுகுறித்து முதியவர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இரண்டு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் ஒரு கடை உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்னொரு கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரு தலை பட்சமாக செயல்படும் திருப்பரங்குன்றம் போலீசாரை கண்டித்து வணிகர் சங்கம் சார்பாக கடை உரிமையாளர்கள் அனைவரும் நேற்று சன்னதி தெருவில் கடைகளின் முன்பு கருப்பு கொடிகட்டி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றம் கோவில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.