பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-ஆவது பிறந்த நாளான நேற்று (செப்.15) திருப்பரங்குன்றத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப்படத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது : அதிமுக எப்போதுமே தனித்து தான் போட்டியிடும் எப்போதும் மைனாரிட்டி ஆட்சி அமைக்காது. தனி பெரும் கட்சியாக உள்ளது. ஆட்சியில் பங்கு குறித்து திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை எப்போது ஏற்க வேண்டும் என்பது பொதுவானது. தற்போது ஆட்சியில் பங்கு என்பது திமுகவின் ஆட்சியில் பங்கு என கூறுகிறார் என தெரிகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக தனிப்பட்ட ஆட்சியாக உள்ளது எங்களுக்கு வேற அந்த சிந்தனையும் கிடையாது. கூட்டணி குறித்து கொள்கை குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடியார் முடிவு செய்வார் என கூறினார்.