மதுரை அவனியாபுரத்தில் உள்ள மலைச்சாமி நினைவேந்தலில் விசிக சார்பில் தொல் திருமாவளவன் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வில்லவன் கோதை மதுரை பாராளுமன்ற பொறுப்பாளர் பாண்டியம்மாள், மாமன்ற உறுப்பினர் இன்குலாப் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 'திமுகவோடு கூட்டணியில் தான் உள்ளோம். தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை. மது ஒழிப்பில் பாமகவும் பாஜகவும் உள்ளனர். ஒருவர் ஜாதி கட்சியாகவும் ஒருவர் மதவாத கட்சியாகவும் இருப்பதால் அவர்களோடு கொள்கை ரீதியாக கூட்டணி வைக்க முடியாது என்றும் கடைசி மக்களுக்கு ஜனநாயகம் எளிய மக்களுக்கு அதிகாரம் என்பதுதான்.
எல்லா மேடைகளிலும் மூப்பனாரே திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார் அவரை நான் வரவேற்று பாராட்டுகிறேன் என்று 1999 லேயே பேசியிருக்கிறார். அதை நினைவுப்படுத்தி நான் செங்கல்பட்டில் பேசினேன். அந்தப் பேச்சை எடுத்து என்னுடைய அட்மின் நிர்வாக குழுவில் இருப்பவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று கருதுகிறேன். ஏன் அதை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் நான் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை' என்றார்.