திருப்பரங்குன்றம்: சஷ்டி விரதம் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா இன்று தொடங்கியது. இன்று (நவ. 2) காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெயவானை, சண்முகர் சன்னதியில் சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்காப்புகட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வருவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரபத்மனை அழிக்கும் நிகழ்வு 7 ம் தேதி மாலை 6. 30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் நடைபெறும். கோயிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.