உலக சமையல் கலைஞர்கள் தினம் வரும் அக்டோபர் 30 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சமையல் கலைஞர்களுக்கான கைவினைத் திறன் மற்றும் மேஜை அலங்கார பொருட்கள் உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கைவினைத் திறன் போட்டி நேற்று (அக். 23) நடைபெற்றது.
இதில் அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசய ராஜ் போட்டியை துவக்கி வைத்தார்.
முதன்மை சமையல் கலைஞர் கோபி விருமாண்டி மற்றும் சமையல் கலைஞர்கள் மேற்பார்வையில் பூசணிக்காய் தர்பூசணி மற்றும் கேரட் , வெள்ளரி, குடைமிளகாய், பீட்ரூட் போன்ற காய்களில் கலைநய மிக்க அலங்காரபடுத்தும் போட்டியில் சுப்புலட்சுமி லட்சுமிபதி கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், மற்றும் பெல் ஹோட்டல், அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி, பாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், , பாஸ்டன் கேட்டரிங், செயின்ட் மேரிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட 6 கல்லூரிகளிலிருந்து 5 மாணவர்கள் வீதம் 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு நடுவராக அமெரிக்கன் கல்லூரி விஸ்காம் துறை பேராசிரியர் நகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கைவினை திறமையால் உருவாக்கிய பொருட்களுக்கு மதிப்பெண் வழங்கினார். முதல் பரிசினை பெல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் பெற்றனர். இரண்டாவது பரிசாக கேடயம், சான்றிதழும் சுப்புலட்சுமி லெஷ்மிபதி கல்லூரி மாணவர்கள் பெற்றனர்.