பெருங்குடி: பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்.

69பார்த்தது
மதுரை மாவட்டம் பெருங்குடியில் நேற்று (அக். 16) தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் முத்துச்சோனை தலைமையில் சிறப்பு பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம் நடைபெற்றது.

விழாவிற்கு பாஜகநலத்திட்ட பிரிவு செயலாளர் முத்துக்குமார் ஐ. டி. பிரிவு மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் அரசு தொடர்பு பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் ராமர், மண்டல் தலைவர் சுந்தர்ராஜன், மண்டல் பொதுச்செயலாளர் பாண்டீஸ்வரி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

ரூபாய் ஐந்து லட்சத்திற்கான பிரதமர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற சுமார் 243 பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். பெருங்குடி, பர்மா காலனி , பரம்புபட்டி, சின்ன உடைப்பு, குதிரை குத்தி ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர் முத்துச்சோனை செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி