திருப்பரங்குன்றம்: அதிமுக ஆண்டு விழாவில் அன்னதானம்
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே இன்று (அக். 17) ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்: கிரிவலப் பாதையில் கடைகள் அகற்றப்பட்டது குறித்த கேள்விக்கு அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதை மறுக்க முடியாது. முன்னதாகவே நோட்டீஸ் கொடுத்து முறையான நடவடிக்கைகளை பின்பற்றி இருக்க வேண்டும். அவர்களின் ஜீவாதாரண உரிமை பாதிக்கப்படுகிறது அதற்கு மாற்று வழி சொல்லி இருக்க வேண்டும். அதிகாரிகள் சில நேரம் அவசரப்பட்டு செய்வது வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்தால் தவறு இல்லை என்றார். ரோப் கார் பணிகள் குறித்த கேள்விக்கு? அதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதை விரைவுப்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்போம் நிச்சயம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் திட்டம் மட்டுமல்ல திருக்கோவில் உள்ள மற்ற ஊர்களில் முன்னேற்ற பணிகள் நடைபெறுகிறது திருப்பரங்குன்றத்தில் மட்டும் இன்னும் சீர்படுத்த வேண்டும். வருடத்திற்கு பிறகு அதிமுக ஆட்சியின் போது இன்னும் அதிகமான திட்டங்களை கொண்டு வந்து பழனியை போல் முன்னேற்றுவோம் என கூறினார்.