அவனியாபுரம்: அயன் பாப்பாகுடி கண்மாயை ஆய்வு செய்த எம்எல்ஏ

60பார்த்தது
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் 440 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இதில் தற்போது முழுவதுமாக வெங்காய தாமரை மற்றும் கோரைப் புற்கள் படர்ந்து உள்ளது,

இந்த அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்களை நீக்கி கரையை பலப்படுத்தி தரவேண்டும் என ராஜன் செல்லப்பா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து இன்று (அக். 24) மதியம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் அயன் பாப்பாக்குடி கண்மாய் கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அயன் பாப்பாக்குடி கண்மாய் பகுதியில் ஏராளமான ஆகாயத்தாமரை மற்றும் கோரைகள் படித்திருப்பதால் அதனை அகற்றுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி