மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று முன்தினம் (அக். 15)மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அதனை தொடர்ந்து நேற்று (அக். 16) இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் போது வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற வந்த ஜேசிபி எந்திரம் முன் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கங்கள் தற்போது சன்னதி தெரு முன்பாக அமர்ந்ததால் திருப்பரங்குன்றம் கோயில் வளாகம் அருகே பரபரப்பாக காணப்பட்டது.