திருப்பரங்குன்றம்: முடிவுக்கு வந்த பஞ்சாமிர்தம் பிரச்சினை.

75பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒப்பந்ததாரர் மூலம் 500 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்த டப்பா ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த டப்பாவின் எடை 400 கிராம் மட்டுமே இருந்ததாக புகார் வந்ததால், விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணனுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து துணை கமிஷனர் சூரியநாராயணன் பஞ்சாமிர்த டப்பாக்களை ஆய்வு செய்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்த துணை கமிஷனர், சரியான எடையில் விற்பனை செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பஞ்சாமிர்த டப்பா எடையை தினமும் பரிசோதிக்க வேண்டும். டப்பாவில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டும். மேல்பகுதியில் 'சீல்' செய்யப்பட்டிருக்க வேண்டும். சரியான எடையை உறுதி செய்த பின்பே விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோயில் உள்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் கோயிலில் நேற்று முன் தினம் (அக். 24) முதல் பஞ்சாமிர்தம் சரியான எடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி