மதுரை: அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்த அமைச்சர்

58பார்த்தது
மதுரை மாவட்டத்தில் இரண்டு நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று (அக். 22) காலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வெளி நோயாளிகள் எவ்வளவு பேர் வருகிறார்கள் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி மருந்து எவ்வளவு இருப்பு உள்ளது போன்ற விவரங்களை கேட்டு அறிந்தார். தொடர்ந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட சுகாதார இயக்குனர் குமரகுருபரன், வட்டார சுகாதார அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி