மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பர்மா காலனியில் பிரபல நகைசுவை பேச்சாளர் மதுரை முத்து குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இவர் தனது 100வது வெளிநாட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து கடந்த சில தினங்கள் முன் மதுரை திரும்பி நிலையில் தான் வசிக்கும் பகுதியில் பெற்றோர்களை இழந்து வாடும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள், முதியவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று (அக். 31) நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், துணிமணிகள் , வெடிகள், இனிப்புகள் வழங்கினார்.
சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தில் சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். நாம் கொண்டாடி சந்தோஷப்படுவதை காட்டிலும் நம்மைச் சுற்றியுள்ள நலிவுற்றவர்கள் சந்தோஷமாக கொண்டாடுவதை பார்த்து சந்தோஷம் அடைவோம் என மனிதநேயத்துடன் மதுரை முத்து கூறியது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.