மதுரை: விஜய் அறிவிப்பை வரவேற்கும் விஜயகாந்த் மகன்.

78பார்த்தது
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜயை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக விஜய பிரபாகரன் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (அக். 30)காலை மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

விஜயகாந்த் மாநாட்டை விட தவெக மாநாட்டிற்கு அதிக கூட்டம் குறித்த கேள்விக்கு?

20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து தான் கட்சி ஆரம்பித்தார். எப்படி மாநாடு நடத்தினார் என அனைவருக்கும் தெரியும்.
அந்த நிகழ்வுகள் இன்னும் என் ஆழ்மனதில் உள்ளது. குறைந்தது 25 முதல் 30 லட்சம் பேர் பங்கேற்றனர்.
சாலையில் ஓடுகின்ற வாகனமே குலுங்கும் அளவிற்கு மக்கள் வெள்ளம் இருந்தது. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்திருந்தன. ஒரு உயிர் பலி கூட இல்லாமல் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என ராணுவ கட்டுப்பாட்டுடன் கேப்டன் மற்றும் அவரது தொண்டர்கள் மாநாட்டை நடத்தினார்கள்.
அவர் அளவிற்கு யாரும் மாநாடு நடத்த முடியாது என பெருமையுடன் சொல்கிறோம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:

அது வரவேற்கத்தக்கது உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சியில் இருக்கும்போது அதை சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல நாங்களும் அதை முன் வைக்கிறோம் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி